வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்: வானிலை மையம் 
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்: வானிலை மையம்

தெற்கு அந்தமானில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN


சென்னை: தெற்கு அந்தமானில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இது வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு அந்தமானில் இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி 24 மணி நேரத்தில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பிறகு புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, வடக்கு ஆந்திரம் - தெற்கு ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கையில் உருவானது டிட்வா புயல்!

“MGR போல விஜய்? வாய்ப்பில்லை! தம்பி இன்னும் நடிகர்தானே!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மகிந்திரா பிஇ6 ஃபார்முலா சொகுசு கார் விலை வெறும் ரூ.18,000! அட உண்மைதாங்க

அதிக தொகைக்கு விற்பனையான கருப்பு ஓடிடி உரிமம்!

பச்சைக்கிளி முத்துச்சரம்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT