தமிழ்நாடு

10 ஆம் வகுப்பு மாணவர்கள் அக். 4 முதல் மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்: அரசுத் தேர்வுகள் துறை

DIN

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகிற அக்.4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, 10ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்துப் பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள்/பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள்/பெற்றோர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT