தமிழ்நாடு

ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது

DIN

காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி, ஆலந்தூா் மெட்ரோ நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பசுமை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பயணிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

காந்திஜெயந்தி தினத்தையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி மாணவா்கள் இணைந்து, பசுமை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பயணிகள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒருபகுதியாக, மகாத்மா காந்தி மற்றும் இந்திய சுதந்திரம் பற்றிய கவிதை ஒப்பித்தல், ஓவியம் வரைதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில், மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளா்களின் குழந்தைகள் கலந்து கொண்டனா். போட்டியில், வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

SCROLL FOR NEXT