பாப்பாபட்டி ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் பாப்பாபட்டி பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம், துணைத் தலைவர் லட்சுமி. 
தமிழ்நாடு

பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்தது என்பதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

DIN

 
மதுரை: முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாப்பாபட்டி ஊராட்சியை தேர்வு செய்தது என்பதற்கான விளக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

காந்தி ஜயந்தியையொட்டி அனைத்து ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு நடைபெறும் முதல் கிராம சபைக் கூட்டம் என்பதால், இந்த முறை பாப்பாபட்டி ஊராட்சியில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டார். 

கூட்டத்தில் கலந்துகொண்ட பாப்பாபட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் முருகானந்தம் அனைவரையும் வரவேற்றார். துணைத் தலைவர் லட்சுமி, மதுரை ஆட்சியர் அனிஷ் சேகர், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாப்பாபட்டி பஞ்சாயத்து கிராம செயலாளர் தங்கபாண்டியன் 32 தீர்மானங்களை முன்மொழிந்தார். 

பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: வலுவான இந்தியா கிராமத்தில் இருந்து தான் உருவாக வேண்டும் என்று காந்தி கூறினார். காந்தியின் கனவாக கிராம ராஜ்ஜியம் நிறைவேற இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது

நான் எத்தனையோ விழாக்களில் கலந்து கொண்டாலும் பாப்பாபட்டியில் நடைபெறும் இந்நிகழ்வில் கலந்து கொள்வதே எனக்கு மன திருப்தி அளித்துள்ளது.

2006 ஆம் ஆண்டுவரை பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்ட கச்சியேந்தல் ஆகிய நான்கு  ஊராட்சிகளுக்கு பஞ்சாயத்து தேர்தல் நடத்த முடியாத நிலை இருந்தது. 

உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியவில்லை ஏன்? :  ஜனநாயகத்தை வலிமைப்படுத்த தேர்தல் நடத்தியே ஆகவேண்டும். நான் அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன். செயலாளராக இருந்த அசோக் வரதன் ஷெட்டியும், மதுரை ஆட்சியராக இருந்த எனது முதன்மைச் செயலாளர் உதய சந்திரனும் கடுமையாக போராடி உங்கள் ஒத்துழைப்புடன் இங்கு பஞ்சாயத்து தேர்தலை நடத்தி முடித்து காட்டினர். 

இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி சமத்துவ பெருவிழா என்ற பாராட்டு விழாவை சென்னையில் நடத்தினார். அதில் கலந்துகொண்ட திருமாவளவன் கூட கருணாநிதியை பாராட்டி சமத்துவப் பெரியார் என்று பட்டம் கொடுத்தார். அப்போது தமிழக அரசு சார்பில் இந்த பஞ்சாயத்துக்கு ரூ.80 லட்சமும், திமுக சார்பில் 20 லட்சம் என நிதி வழங்கப்பட்டது. அந்த நிதி மூலம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் இந்த கிராமத்தில் நிறைவேற்றப்பட்டது. 

தமிழகத்தில் எத்தனையோ கிராமங்கள் இருந்தாலும் பாப்பாபட்டி கிராமத்தை தேர்ந்தெடுத்ததற்கு இதுதான் காரணம். ஒற்றுமை உணர்வோடு இந்த கிராம சபை கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது .அப்போதைய குடவோலை முறை தான் இப்போது எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் என்ற முறையாக மாறியுள்ளது.

கடைக்கோடி மனிதனின் குரல் கேட்கப்பட வேண்டும் அதுவே கிராம ராஜ்ஜியம் என்று காந்தியடிகள் கூறினார். அதை திமுக அரசு நிறைவேற்றும. தேர்தல் வாக்குறுதியில் 505 வாக்குறுதிகள் கொடுத்து அதில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மீதமுள்ளவை விரைவில் நிறைவேற்றப்படும். இந்த ஆட்சி சாமானியர்களுக்கு நடத்தப்படும் ஆட்சியாகும். விவசாயிகளின் குறைகளை கேட்டு அதற்காக தனி நிதிநிலை அறிக்கை எந்த மாநிலத்திலும் இல்லாதவாறு கொண்டுவரப்பட்டது. ஒளிமயமான தமிழகத்தை உருவாக்க நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய யானையை அமெரிக்க எலி தாக்குவது போலத்தான் டிரம்ப் வரி: ரிச்சர்டு வோல்ஃப்

ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் சென்றார் பிரதமர் மோடி!

அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

விராலிமலை அருகே அய்யனார் கோயிலில் குதிரை எடுப்பு விழா

ரூ.12 கோடியில் சீரமைக்கப்பட்ட தாவரவியல் பூங்கா; அடுத்த மாதம் திறப்பு: புதுவை அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா்

SCROLL FOR NEXT