தமிழ்நாடு

உள்ளாட்சித் தேர்தல்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உள்துறை செயலர் ஆலோசனை

DIN

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் புதன்கிழமை (அக்.6), சனிக்கிழமை (அக். 9) தேதிகளிலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமையும் (அக்.9) நடைபெற உள்ளது.

இந்தத் தோ்தலில் மொத்தம் 80,819 போ் தோ்தல் களத்தில் உள்ளனா். இவா்களுக்கு ஆதரவாகவும் அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் மற்றும் ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 17,662 பதவிகளுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (அக்.6) காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், எல்லைப் பிரச்னைகள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் குழுவுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையில் டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT