தமிழ்நாடு

பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

DIN

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலியானார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பேனர்கள் வைப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசு இன்று அளித்த பதிலில், பேனர் வைக்க ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் சிறுவனை பணியில் அமர்த்தியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

இதையடுத்து நீதிபதிகளின் உத்தரவில்,

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும். பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுகவினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்ல்ஸனை வீழ்த்தினாா் பிரக்ஞானந்தா

நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்

29 முறை எவரெஸ்ட்டை எட்டி சாதனை படைத்த கமி ரீட்டா

நாகை-இலங்கை கப்பல் சேவை: மே 17-ஆம் தேதிக்கு மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT