தமிழ்நாடு

தொடர் மழை: கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம்

DIN

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சனிக்கிழமை முதல் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை மாலை கொடைக்கானல் மலைப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் இன்று காலை முதல் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்து, கட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவிக்கு செல்லத் தடை விதித்தது தொடர்வதால், பொதுமக்கள் அருவிக்குச் செல்ல அனுமதியில்லை. மேலும், செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT