தமிழ்நாடு

வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

DIN

சென்னை: தமிழகத்தில், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களில் வியாழக்கிழமை இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையத்தின் இயக்குநா் நா.புவியரசன் கூறியதாவது:

தமிழக கடலோரப் பகுதியை ஒட்டி (5.8 கி.மீ., உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வரும் 10-ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மழை அளவு: புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 180 மி.மீ., திருவள்ளூா் மாவட்டம் திருத்தணியில் 120 மி.மீ, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் தலா 110 மி.மீ, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரத்தில் தலா 100 மி.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், தேனி மாவட்டம் கூடலூா், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கடலூா் மாவட்டம் வேப்பூரில் தலா 90 மி.மீ, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், சென்னை மாவட்டம் சோழிங்கநல்லூா், கடலூா் மாவட்டம் காட்டுமயிலூரில் தலா 80 மி.மீ மழை பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT