தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட மாதுடையார்குளம் கிராம பொதுமக்கள். 
தமிழ்நாடு

அடிப்படை வசதிகள் வேண்டி தேர்தல் புறக்கணிப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தை; 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது வாக்குப்பதிவு

அம்பாசமுத்திரம் மாதுடையார்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத் அதிகாரிகளின் பேர்ச்சுவார்த்தையை அடுத்து 3 மணி நேரம் தாமதமாக  வாக்குப்பதிவு தொடங்

DIN

அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் மாதுடையார்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதையடுத் அதிகாரிகளின் பேர்ச்சுவார்த்தையை அடுத்து 3 மணி நேரம் தாமதமாக  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது மலையாங்குளம் ஊராட்சி. மாதுடையார்குளம் ஊராட்சியில் ஐந்து மற்றும் ஆறாவது வார்டுகளுக்கு உள்பட்டது மாதுடையார் குளம் கிராமம்.  

இந்த வார்டில் சுமார் 550 வாக்குகள் உள்ளன. இன்று புதன்கிழமை உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், இந்த கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான குடிநீர், போக்குவரத்து மற்றும் ரேஷன் கடை உள்ளிட்டவை தேவை என்று கோரி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் சேரன்மகாதேவி வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் வட்ட வழங்கல் அலுவலர் சீதாதேவி மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் மஹாராஜன், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பொன்னு லெட்சுமி ஆகியோர் மாதுடையார்குளம் கிராம பொது மக்களிடம் பேச்சு நடத்தி தேர்தல் முடிந்ததும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து உறுதியாக ரேஷன் கடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை அடுத்து வாக்களிக்க சம்மதித்தனர். 

இதையடுத்து சுமார் பத்து முப்பது மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. 

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மக்கள் தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் முயற்சி நடத்தியதை அடுத்து மக்கள் வாக்களிக்க சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

திருச்சியில் மூன்று இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நாளை(அக். 14) முதல் 4 நாள்கள் சட்டப்பேரவை கூட்டம்! - அப்பாவு

ஆம்பூர் அருகே ஆற்றில் தவறி விழுந்து இளைஞர் பலி

92 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT