தமிழ்நாடு

மஹாளய அமாவாசை: சுருளி அருவி வளாகப் பகுதியில் பக்தர்கள் அனுமதி

DIN

கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருவி வளாகப் பகுதியில் மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை நாளில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தி அடையும் என்றும், நல்லாசி கிடைக்கும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் வழிபாடுகள் நடத்துவார்கள்.

அதன்பேரில் புதன்கிழமையன்று மஹாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு அதிகாலை முதலிலே சுருளி அருவி வளாகம் பகுதிக்கு ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். சுருளி அருவி ஆற்றின் கரையில் அமர்ந்து அங்குள்ள பூசாரிகள் மூலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தும், அன்னதானம் வழங்கியும், பூத நாராயணசாமி கோயிலில் வழிபாடுகள் நடத்தியும் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT