மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பண பூஜை செய்ய திருப்புவனம் வைகை ஆற்றங்கரை ஓரம் கூடிய மக்களை போலீசார் விரட்டினர். 
தமிழ்நாடு

திருப்புவனத்தில் போலீசார் விரட்டியதால் தாங்களாகவே வைகை ஆற்றுக்குள் தர்ப்பணம் செய்த மக்கள்!

மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களா

DIN

மானாமதுரை: மகாளய அமாவாசையை முன்னிட்டு காசிக்கு நிகராக கருதப்படும் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வைகை ஆற்றில் புதன்கிழமை காலை தர்ப்பணம் செய்ய வந்த மக்களை போலீசார் விரட்டியதால் அவர்கள் ஆற்றுக்குள் சென்று தாங்களாகவே தர்ப்பண பூஜை செய்து வீடு திரும்பினர். 

திருப்புவனத்தில் இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இங்கு மேற்கண்ட காரியங்களை செய்தால் காசியில் செய்ததற்கு இணையானது என நம்பப்படுகிறது. இதனால் தினமும் தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் திருப்புவனம் வைகையாற்றில் கூடுவார்கள். 

இந்நிலையில், கரோனா கட்டுப்பாடுகளால் மகாளய அமாவாசையை முன்னிட்டு திருப்புவனம் வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் மேற்கண்ட  இடத்துக்கு வரும் வழியில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தனர். தடுப்புகளை மீறி இந்த இடத்துக்கு வந்தவர்களை போலீசார் விரட்டினர். இதனால் தர்ப்பணம், திதி கொடுக்க வந்த மக்கள் வைகை ஆற்றுக்குள் இறங்கி அவர்களாகவே எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர். 

வழக்கமாக திருப்புவனம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதியில் கிரிகை,திதி செய்வதற்கான வேத விற்பன்னர்கள் யாரும் அங்கு காணப்படவில்லை. மானாமதுரை பகுதியில் மக்கள் அவர்களாகவே வைகையாறு உள்ளிட்ட கோயில்களுக்குச் சென்று எள்ளும் தண்ணீரும் இரைத்து தர்ப்பணம் செய்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT