காவிரியில் நீராடி தர்ப்பணம் செய்த குறைவான உள்ளூர் மக்கள்.  
தமிழ்நாடு

பூம்புகாரில் கடலில் நீராட தடை: வெறிச்சோடி காணப்பட்ட பூம்புகார் சங்கமத் துறை

கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது பூம்புகார் சங்கமத் துறை.

DIN


பூம்புகார்: கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்ததால் வெறிச்சோடி காணப்பட்டது பூம்புகார் சங்கமத் துறை.

தங்களுடைய மூதாதையர் நினைவாக மாதம்தோறும் அமாவாசை அன்று தர்பணம் கொடுத்து வழிபடுவது இந்துக்களின் மரபாக இருந்து வருகிறது. 

தற்போது நவீன காலத்தில் மாதம் தோறும் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள், தை, ஆடி மற்றும் மகாளய அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுத்தால் நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதாக புராணங்களில் கூறப்படுகிறது. 

கரோனா காரணமாக மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகாரில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படும் கடற்கரை.

காவிரி ஆறு கடலில் கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் நீராடி வழிபட்டால் சிறப்பான வாழ்க்கை பெறலாம் என்பது ஐதீகம். ஆனால் தற்போது கரோனா காரணமாக பூம்புகாரில் கடலில் நீராட மயிலாடுதுறை ஆட்சியர் லலிதா தடை விதித்திருந்தார். 

புதன்கிழமை மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகாரில் நீராட பக்தர்கள் வராததால், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. ஆனாலும் உள்ளூர் குறைவான பொதுமக்கள் காவிரியில் நீராடி தர்ப்பணம் செய்தனர். 

தர்ம குளம் கடைவீதியில் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு, கடற்கரைக்கு பக்தர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

மின்துறை அதிகாரி வீட்டில் ரூ.300 கோடி சொத்து ஆவணங்கள், ரூ.2,18 கோடி பறிமுதல்!

காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

SCROLL FOR NEXT