தமிழ்நாடு

முதல்வருடன் டாடா குழுமத் தலைவர் சந்திப்பு!

DIN

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, டாடா குழுமத் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். 

இந்த சந்திப்பின்போது, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், முதல்வரின் முதன்மைச் செயலாளர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

சென்னையில் இயங்கி வந்த கார் உற்பத்தி தொழிற்சாலையான ஃபோர்டு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், மூடப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

தற்போது ஃபோர்டு நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டாடா குழுமத் தலைவர் முதல்வரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT