முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

புலம்பெயர் தமிழர்களுக்கு நலவாரியம் அமைப்பு: முதல்வர் அறிவிப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

DIN

புலம்பெயர் தமிழர்களுக்கான நலவாரியம் அமைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட செய்தியில்,

“எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும் தமிழ்நாடுதான் தாய்நாடு. அன்பு செலுத்துவது மட்டுமின்றி அரவணைத்து பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமை. உலகின் பெரும்பான்மை நாடுகளில் வாழும் இனமாக தமிழினம் தான் இருக்கின்றது. பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பிரச்னைகளை தீர்க்க, உதவி செய்ய தமிழக அரசு முன்வந்துள்ளது.

வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நலவாரியம் அமைக்கப்படும்.புலம்பெயர் தமிழர்கள் 13 பேரைக் கொண்டு புதிய நலவாரியம் அமைக்கப்படும்.

புலம்பெயர் நல வாரியம், புலம்பெயர் தமிழர்களுக்கான திட்டங்களுக்கு மொத்தம் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்படும்.

புலம்பெயர் தமிழர் குறித்த தரவுதளம் ஏற்படுத்தி அதில் பதிவு செய்வோருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். குறைந்த வருவாய் பிரிவினர் வெளிநாட்டில் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 பைக்குகள் திருட்டு: இளைஞா் கைது

மானுடவியலின் மகத்துவம்

அவல்பூந்துறையில் ரூ.10.45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள்

மண் அல்ல, பொன்!

SCROLL FOR NEXT