தமிழ்நாடு

பிள்ளைப்பேறு நிச்சயம்: அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருள்களால் அபிஷேகம்

DIN

மகாளய அமாவாசையை ஒட்டி பூம்புகார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அஸ்திர தேவர் மேளதாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடந்தது.

மிகவும் பிரசித்தி பெற்ற பூம்புகார் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில், சிவனின் முக்கண்கள் இருந்து தோன்றிய மூன்று பொறிகள் விழுந்த இடத்தில் சந்திரன், சூரியன் மற்றும் அக்னி ஆகிய பெயர்களை தாங்கிய மூன்று குளங்கள் உள்ளன. இந்த மூன்று குளங்களில் நீராடி ஸ்வேதாரண்யேஸ்வரர் வழிபட்டால் பிள்ளைப்பேறு நிச்சயம் என புராண வரலாறுகள் கூறுகின்றன.

இந்த நிலையில் மகாளய அமாவாசையை ஒட்டி புதன்கிழமை அஸ்திர தேவர் மேளதாளம் முழங்கிட மூன்று குளங்களுக்கு எடுத்து வரப்பட்டு, பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதனைத் தொடர்ந்து தீர்த்தவாரி நடந்தது. 

இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் செய்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT