தமிழ்நாடு

நிலக்கரி பற்றாக்குறை: சிமெண்ட் விலை ரூ.50 உயர்கிறது

DIN


நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக சிமெண்ட் விலை உயர வாய்ப்புள்ளதாக சிமெண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

விலை உயர்வு காரணமாக நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிமெண்ட் மூட்டை விலை குறைந்தபட்சம் ரூ.50 உயரக்கூடும் எனவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சிமெண்ட் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியின் விலை இதுவரை இல்லாத அளவில் உயர்ந்துள்ளதே சிமெண்ட் விலை உயர்வுக்கு காரணம் என்று விளக்கம் அளித்துள்ளது.

நிலக்கரியின் விலை சமீபகாலமாக 3 மடங்கு வரை விலை அதிகரித்துள்ளது. ஒரு டன் ரூ.4 ஆயிரமாக இருந்த நிலக்கரி விலை, கடந்த மூன்று மாதங்களில் படிப்படியாக உயர்ந்து தற்போது, ரூ.12 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இதனால் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. துணிகளில் சாயம் வெளுக்க நிலக்கரி பெருமளவு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT