தமிழ்நாடு

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம்: காணொளி மூலம் பிரதமர் திறந்து வைத்தார்!

DIN


சீர்காழி: சீர்காழி அரசு மருத்துவமனையில் பாரத பிரதமரின் பி.எம்.கேர் திட்டத்தின் கீழ் ஆக்சிஜன் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது. புதிதாக அமைக்கப்பட்ட 1000 எல்பிஎம் திறன் கொண்ட இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பானுமதி தலைமை வகித்தார். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா திறந்து வைத்து இயந்திரங்களை இயக்கி வைத்தார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் இரண்டாம் அலையின் போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கரோனா பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.

சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா.

கடந்த மே மாதம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் புதிதாக ஆக்சிஜன் பேங்க் நிறுவப்பட்டது. நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக் குறையைப் போக்கும் வகையில் பி.எம்.கேர்ஸ் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த ஆக்சிஜன் உற்பத்தி மையத்திற்கு மாநில அரசின் நிதி உதவியுடன் அதன் மின் தேவையை பூர்த்தி செய்ய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் இனி வரும் காலங்களிலும் கரோனோ மூன்றாம் அல்லது மூச்சுத் திணறல் நுரையீரல் தொற்று போன்ற வேறு ஏதேனும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் எளிதாக கிடைக்கும். இதன் மூலம் நோயாளிகளின் உயிரிழப்பு பெருமளவு குறைக்கப்படும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருதவாணன், அருண்ராஜ்குமார், பூ பேஸ் தர்மேந்திரா, வட்டாட்சியர் சண்முகம், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகா அலெக்சாண்டர், மாவட்ட பிரதிநிதி அன்பழகன் இளைஞரணி நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT