முகப்பு
தமிழ்நாடு

ரத்தாகும் புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: புதிய இட ஒதுக்கீடு ரத்து!

புதுச்சேரியில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை மாநில தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது.

Updated On : 7 அக்டோபர் 2021, 2:07 pm IST
பகிர்:


புதுச்சேரி: புதுச்சேரியில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை மாநில தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது.

புதுச்சேரியில் பத்தாண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம்(செப்.22) அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை ரத்து செய்து, இட ஒதுக்கீடு குளறுபடிகளை களைந்து, சட்ட விதிகளின்படி தேர்தல் நடத்த வேண்டும். இதனால் அறிவித்த தேர்தலை ரத்து செய்து, ஒரு வாரத்துக்குள் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனை அடுத்து புதன்கிழமை ஆலோசனை நடத்திய புதுச்சேரி அரசு, அண்மையில் அறிவிக்கப்பட்ட தேர்தலுக்காக கடந்த 2019 ஆம் வெளியிட்ட உள்ளாட்சி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, புதன்கிழமை அரசாணை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில தேர்தல் துறை, அண்மையில் புதியதாக அறிவித்த உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில், 2019 இல் வார்டு இட ஒதுக்கீடு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக வியாழக்கிழமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதனால், புதுச்சேரியில் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தேர்தல் விரைவில் ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிடும் நடவடிக்கையை மாநில தேர்தல் துறை மேற்கொண்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.