முகப்பு
தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:19 AM
சென்னை விமான நிலையத்தில் ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
பகிர்:

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.32 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று(அக்-8) வந்து 21-வயதான பயணியைச் சோதனை செய்தபோது அவர் மின்னணு சாதனத்தில் வைத்து 774 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் சுங்கத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பயணியைக் கைது செய்ததோடு அவரிடமிருந்த தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.32.24 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட  மின்னணு சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.2.12 லட்சம் ஆகும்.

சமீப காலமாக துபையிலிருந்து தமிழகத்திற்கு தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →