தமிழ்நாடு

மானாமதுரையில் நவராத்திரி விழா: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன்!

DIN

மானாமதுரை:  சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் தொடங்கியுள்ள நவராத்திரி முதல் நாளான வியாழக்கிழமை இரவு உற்சவர் ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

மானாமதுரையில்  ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இதையொட்டி கோயில் முன் மண்டபத்தில் கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. உற்சவர் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். 

அதைத்தொடர்ந்து மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், மகாதீபாராதனை நடந்தது. 

அதன்பின்னர் சோமநாதர் சன்னதியில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளி அருள்பாலிக்கும் துர்க்கை அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. முதல் நாள் விழாவில் திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து ஆனந்தவல்லி அம்மனையும் துர்க்கை அம்மனையும் தரிசனம் செய்தனர். 

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரம்.

மானாமதுரை புரட்சியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தியாக வினோத பெருமாள் கோயிலில் நடைபெற்ற முதல் நாள் நவராத்திரி விழாவில் ஸ்ரீதேவி பூதேவி சமேதமாய் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி கோயில் உள் பிரகாரத்தை வலம் வந்தார். 

முன்னதாக பெருமாளுக்கும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கொலு அலங்காரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொலு அலங்காரத்தை பார்வையிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT