முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்) 
தமிழ்நாடு

பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின்

பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

பிறைசூடனின் மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பு என்று முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், "நல்ல பாட்டை மட்டுமே எழுதுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு எழுதிக்கொண்டிருக்கும் என்  ஊர்க்காரர் - உடன்பிறப்பு" என தலைவர் கருணாநிதியால் புகழப்பட்டவர்; திருவாரூர் மண்ணிலிருந்து புறப்பட்டுத் திரையிசையில் தனக்கெனத் தனியிடம் பிடித்த கவிஞர் கலைமாமணி பிறைசூடன் மறைவு அதிர்ச்சியளிக்கிறது.

பல தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகுக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், இரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறாரா விஜய்?

அதிமுக பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்!

2026 உலகக் கோப்பையில் விளையாடுவது சந்தேகம்..! மெஸ்ஸி பேட்டியால் சோகம்!

சென்னை சென்டிரல் - ஆவடி இடையே ரயில் சேவை பாதிப்பு!

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT