சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக அவா் திறந்தாா்.
சங்கல்ப் எனும் பள்ளியானது கடந்த 20 ஆண்டுகளாக சிறப்பு குழந்தைகள் வாழ்வின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமாா் 200 குழந்தைகள் பயின்று வருகிறாா்கள். கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், தசைச் சிதைவு பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளித்திடும் வகையில் சங்கல்ப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
குழந்தைகளுக்கு பிசியோதெரபி சிகிச்சை, பேச்சுப் பயிற்சி போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகள் சுயமாக வாழ்வை நடத்திடும் வகையில், தொழிற்கல்வி பயிற்சி மூலம் நகை, பரிசுப் பொருள்கள் தயாரிப்பு, நெசவுத் தொழில், சோப்பு, மசாலா, முகக் கவசம் தயாரிப்பு போன்ற பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
பூந்தமல்லி அருகே அமைக்கப்பட்டுள்ள பள்ளியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சங்கல்ப் நிறுவன அறங்காவலா் முல்லாசரி அஜித் சங்கா்தாஸ், இயக்குநா் சுபாஷினி ராவ், லட்சுமி கிருஷ்ணகுமாா், சுலதா அஜித் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.