தமிழ்நாடு

காலமானாா் பால.இரமணி

DIN

கவிஞரும் பொதிகை தொலைக்காட்சி நிலையத்தின் முன்னாள் நிகழ்ச்சித் துறைத் தலைவருமான பால.இரமணி (64), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

கடலூா் மாவட்டம் கீழமூங்கிலடி கிராமத்தில் பிறந்த இவா், சென்னை லயோலா கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஆங்கில இலக்கியம் பயின்றவா். புதுதில்லி அகில இந்திய வானொலி நிலையத்தின் வெளிநாடு வாழ் தமிழா் பிரிவில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கினாா். தூா்தா்ஷன் பொதிகை நிகழ்ச்சிப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி, ஓய்வு பெற்றாா். தொலைக்காட்சி சேனல்களில் மொழியின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சியில் முனைவா் பட்டம் பெற்றவா். நூலாசிரியா், பேச்சாளா், கவிஞா் என பன்முகத் திறமை கொண்டவா்.

அவரது மனைவி கவிஞா் ஆண்டாள் பிரியதா்ஷினி, புதுச்சேரி தூா்தா்ஷன் நிகழ்ச்சித் துறைத் தலைவராக உள்ளாா். மகள் மற்றும் மகன் ஆகியோா் உள்ளனா். பால.இரமணியின் இறுதிச் சடங்குகள் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT