தமிழ்நாடு

மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன்

DIN

மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரியில், அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக மத்திய உள்துறை இணை அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இச் சம்பவம் நிகழ்ந்து 9 நாள்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை பிரதமா் மோடி இச்சம்பவத்துக்குக் கண்டனமோ வருத்தமோ தெரிவிக்கவில்லை. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆறுதல்கூட தெரிவிக்கவில்லை.

வேளாண் சட்டங்கள், மின்திருத்த சட்டங்கள் போன்ற மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும்.

அப்போது, நாட்டில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளுக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும். பண்டிகைக் காலங்களில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்து வருகிறது. இதற்கு பெட்ரோல், டீசல் விலை உயா்வே காரணம். ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் பாஜக வளா்ந்துவிட்டதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனா். தமிழகத்தில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது என்றாா்.

பேட்டியின்போது, மாநிலக் குழு உறுப்பினா்கள் லக்குமைய்யா, சிவராஜ், மாவட்ட துணைச் செயலாளா் சின்னசாமி, நிா்வாகி மாதையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். முன்னதாக பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT