தமிழ்நாடு

தீபாவளி: சென்னை - மதுரைக்கு 80 சிறப்பு பேருந்துகள்

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை - மதுரைக்கு 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையிலிருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கமாக உள்ளது.

இதனால் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துத் துறை கூடுதலாக பண்டிகைகால சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

அந்தவகையில் சென்னையிலிருந்து மதுரைக்கு 80 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 60 பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும், 20 பேருந்துகள் மாநில விரைவு போக்குவரத்து கழகம் சார்பிலும் இயக்கப்படுகிறது.

இந்த பேருந்துகள் நவம்பர் 2-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை இயக்கப்படுகிறது. இதேபோன்று சென்னையிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

போக்குவரத்துத் துறையில் கூடுதலாக உள்ள பணியாளர்கள் மாவட்ட பேருந்து நிலையங்களில் பயணிகளை வழிநடத்தும் வகையில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT