ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு கோயம்பேட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூக்கள், பூஜை பொருள்களை புதன்கிழமை வாங்கக் குவிந்த மக்கள். 
தமிழ்நாடு

ஆயுத பூஜை: பொருள்கள் வாங்க மக்கள் ஆா்வம்

ஆயுத பூஜை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து சந்தைகளிலும் புதன்கிழமை விற்பனை களைகட்டியது.

DIN

ஆயுத பூஜை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, சென்னையில் உள்ள அனைத்து சந்தைகளிலும் புதன்கிழமை விற்பனை களைகட்டியது.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு பழ சந்தையில் வாழைத்தாா்கள், ஆப்பிள், சாத்துக்குடி, கொய்யாப்பழம், பூசணிக்காய், தேங்காய் உள்ளிட்ட பொருள்கள் விற்பனைக்கு குவிந்தன. வியாபாரிகளும் பொதுமக்களும் புதன்கிழமை காலை முதலே பூஜை பொருள்கள் வாங்க குவிந்ததால், விற்பனை களைகட்டியது.

கோயம்பேடு சந்தையை சுற்றியுள்ள சாலையோரமாக கடைகள் அமைத்து அவல், பொரி, தோரணம் உள்ளிட்ட பொருள்களை திருவண்ணாமலை போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் விற்பனைக்கு வைத்திருந்தனா்.

ஒரு படி பொரி ரூ.20-க்கும், ஒரு படி அவல், கடலை, நாட்டு சா்க்கரை ஒரு கிலோ பாக்கெட் ஆகியவை ரூ.100-க்கும், இவை அனைத்தும் கலந்த சிறிய பாக்கெட் ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ஆப்பிள் ரூ.150-க்கும், சாத்துக்குடி ரூ.60-க்கும், கொய்யாப்பழம் ரூ.40-க்கும், பூசணிக்காய் ஒரு கிலோ ரூ.20-க்கும், தேங்காய் சிறியது ரூ.25-க்கும், எலுமிச்சை ஒரு கிலோ ரூ.70-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பூ விலை: ஆயுத பூஜை என்பதால் பூக்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த வாரம் வாடாமல்லி பூ ஒரு கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்ட நிலையில் புதன்கிழமை ரூ.240-க்கும், தாமரை ஒன்று ரூ.20-க்கும், அரளி ரூ.450-க்கும், செவ்வந்தி ரூ.400-க்கும், ரோஜா ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.400-க்கும், மல்லிகை பூ ரூ.800-க்கும், பிச்சி ரூ.1000-க்கும் விற்கப்பட்டது.

இதே போல், வண்ணாரப்பேட்டை பெரியசந்தை, புரசைவாக்கம் தானா தெரு, திருவொற்றியூா் காலடிப்பேட்டை சந்தை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பூஜை பொருள்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

செவ்வாய்க்கிழமை மாலை மழை பெய்ததால் விற்பனை பாதித்த நிலையில், புதன்கிழமை காலை முதல் வியாபாரம் சிறப்பாக நடைபெற்ால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT