கோப்புப்படம் 
தமிழ்நாடு

ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் உயிரிழப்பு

ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

DIN


ஆலங்குளம்: ஆலங்குளத்தில் தேர்தல் பணிக்கு வந்த அலுவலர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

திண்டுக்கல் திரு நகரைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் அருள் சேகரன்(65). ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலரான இவர், ஆலங்குளம் அத்தியூத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு துணைத் தேர்தல் அலுவலராக செவ்வாய்க்கிழமை வந்துள்ளார். புதன்கிழமை அதிகாலை வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ள நிலையில் அங்குள்ள கடை ஒன்றில் தேநீர் அருந்த சென்றுள்ளார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறி மயக்கம் அடைந்துள்ளார். 

இதையடுத்து சக அலுவலர்கள் அவரை ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

பழங்குடியின மக்களின் பாதுகாப்பு நிழல் ‘ஷிபு சோரன்!’ -ஜார்க்கண்ட் முதல்வர் உருக்கம்!

எஸ்எஸ்சி தேர்வர்கள் போராட்டம்: தேர்வு நடைமுறைகளை எளிதாக்க வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 52 காசுகள் சரிந்து ரூ.87.70 ஆக நிறைவு!

மாசாணி அம்மன் கோவிலில் விமலின் புதிய படப் பூஜை!

SCROLL FOR NEXT