தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 
தமிழ்நாடு

ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் 

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 

DIN



புதுதில்லி: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தில் 2 புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. கடந்த 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நான்கு நாள்களாக தாமதமாக மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. 

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஒடிசா, ஆந்திரம் பகுதியை நோக்கிச் செல்லும். 

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி:  வங்கக் கடலை தொடர்ந்து தென்கிழக்கு அரபிக்கடலிலும் புதிய காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. 

ஒரே நேரத்தில் உருவாகியுள்ள 2 காற்றழுத்த தாழ்வு பகுதியால் 3 நாள்களுக்கு தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

நாட்டு நலப் பணி திட்ட சிறப்பு முகாம் நிறைவு

நெமிலி பாலா பீடத்தில் நவராத்திரி இன்னிசை விழா நிறைவு

SCROLL FOR NEXT