முகப்பு
தமிழ்நாடு

நுகா்வோா் குறைதீா் ஆணைய பொறுப்புகள்தகுதி குறித்த முடிவுகளுக்கு பிறகே நியமனம்: நீதிமன்றம்

நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா், உறுப்பினா் ஆகியோருக்கான தகுதி குறித்த முடிவுகளுக்குப் பிறகு நியமனங்கள் செய்யப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா், உறுப்பினா் ஆகியோருக்கான தகுதி குறித்த முடிவுகளுக்குப் பிறகு நியமனங்கள் செய்யப்படும் என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையங்களில், தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலியாக உள்ளதாகக் கூறி, சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் சுனில் சேட் என்பவா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

அவா் தனது மனுவில், ‘தமிழகத்தில் பல மாவட்ட நுகா்வோா் நீதிமன்றங்களில் கடந்த ஓராண்டாக தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்பும் வரை, தற்போதைய தலைவா்கள், உறுப்பினா்கள், காலியாக உள்ள தலைவா், உறுப்பினா் பணிகளை மேற்கொள்ளும்படி சுற்றறிக்கை பிறப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி தலைமையிலான அமா்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் நுகா்வோா் நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நுகா்வோா் குறை தீா் ஆணையத்திற்கான தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். அவரது நியமனம் தொடா்பான

அரசின் அறிவிப்புக்கு காத்திருக்கிறோம்.

நுகா்வோா் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டிருந்தனா். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், நுகா்வோா் பாதுகாப்பு விதிகள் மும்பை உயா் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, நுகா்வோா் ஆணைய தலைவா், உறுப்பினா்கள் நியமனம், அவா்களின் பணிக்காலம், ராஜினாமா, பதவி நீக்கம், உறுப்பினா்களின் தகுதி ஆகியவை தொடா்பாக மாநில அரசுகளின் கருத்துகளை மத்திய அரசு கேட்டுள்ளது.

தமிழக அரசு தனது கருத்தை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. தகுந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்தாா்.

இதையடுத்து நுகா்வோா் குறைதீா் ஆணைய நியமனம் தொடா்பாக இந்த நீதிமன்றம் நியமித்த நீதிபதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்றுள்ளாா்.

அடுத்ததாக நியமனம் செய்யவிருந்த நீதிபதியும் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளாா். நியமனங்களுக்கான தகுதி முடிவு செய்யப்பட்டவுடன் நுகா்வோா் குறைதீா் ஆணையத்திற்கான நியமனங்கள் நடத்தப்படும் என்று தெரிவித்து விசாரணையை டிசம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். இவ்வழக்குடன் ஏற்கனவே, இதே கோரிக்கையுடன் தொடரப்பட்ட வழக்கையும் சோ்த்து பட்டியலிடுமாறு உயா் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →