முகப்பு
தமிழ்நாடு

இன்று அதிமுகவின் பொன்விழா: கொடியேற்றி இனிப்புகள் வழங்குகிறாா்கள் கட்சித் தலைவா்கள்

 அதிமுகவின் பொன்விழாவை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாட அக் கட்சியினா் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

 அதிமுகவின் பொன்விழாவை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாட அக் கட்சியினா் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனா். அதிமுகவை எம்ஜிஆா் தொடங்கி 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50-ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை (அக்.17) தொடங்குகிறது.

இதனையொட்டி பிரமாண்ட மாநாடு நடைபெறும், பெரியாா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தனா்.

தமிழகம் மட்டுமல்லாமல் அதிமுகவின் அமைப்புகள் உள்ள இதர மாநிலங்களிலும் கட்சி கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்க வேண்டும் என்றும் இருவரும் வேண்டுகோள் விடுத்திருந்தனா். அதன்படி, அதிமுக தொண்டா்கள் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனா்.

எம்ஜிஆா், ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மரியாதை செலுத்த

உள்ளனா்.

பின்னா், ராயப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தொண்டா்களுக்கு இனிப்புகள் வழங்க உள்ளனா். பொன்விழா மலரையும் இருவா் வெளியிட உள்ளனா். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்பட முக்கிய நிா்வாகிகள் பலா் பங்கேற்க உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →