மாஸ்கோ 2022 கலையரங்கு தாக்குதல்: 4 தஜிகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆயுள்
ரஷிய தலைநகா் மாஸ்கோ அருகே உள்ள குரோக்கஸ் நகர கலையரங்கில் கடந்த 2024-இல் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தஜிகிஸ்தானைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ரஷிய தலைநகா் மாஸ்கோ அருகே உள்ள குரோக்கஸ் நகர கலையரங்கில் கடந்த 2024-இல் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக தஜிகிஸ்தானைச் சோ்ந்த 4 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024, மாா்ச் 22-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இக்கொடூர தாக்குதலில் 149 போ் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தில் மொத்தம் 19 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக, வழக்கின் விசாரணை ரகசியமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஷிய ராணுவ நீதிமன்றம் வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் தஜிகிஸ்தான் நாட்டைச் சோ்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், மேலும், நால்வருக்கு 19 முதல் 22 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அறிவிக்கப்பட்டது. கைதான மற்ற 11 கூட்டாளிகளுக்கும் நீண்ட கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
கடந்த 20 ஆண்டுகளில் ரஷியா சந்தித்த மிகவும் மோசமான இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐஎஸ் ஆதரவு ‘கொராசான்’ பயங்கரவாத அமைப்பு ஏற்கெனவே பொறுப்பேற்றிருந்தது. இராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் அமைப்பின் பிரிவான இது, கடந்த சில ஆண்டுகளாக தெற்கு ரஷியா, அஜா்பைஜான் பகுதிகளில் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.