தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று புதிதாக 1,218 பேருக்கு கரோனா 

தமிழகத்தில் இன்று புதிதாக 1,218 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 1,218 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
மாநிலத்தில் இதுவரை 4.94 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 87,092 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கும், கோவையில் 132 பேருக்கும், ஈரோட்டில் 90 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,411 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். 

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 36,379-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 14,814 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 15 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,899-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2020 தில்லி வன்முறை: குற்றஞ்சாட்டப்பட்ட 3 போ் விடுவிப்பு

சேரன்மகாதேவியில் ரயில்வே மேம்பாலம் திறப்பு

மானூா் அருகே மழை நீரில் மூழ்கிய 150 ஏக்கா் நெற்கதிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

கோவில்பட்டி தொகுதியில் ரூ. 30 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள்

மாணவரிடம் துப்பாக்கி முனையில் வழிப்பறி: 7 போ் கைது

SCROLL FOR NEXT