தமிழ்நாடு

முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி: புகாா்களுக்கு 104-ஐ அழைக்கலாம்

DIN

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி, கா்ப்பிணியருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் 104 மருத்துவ சேவை மையத்தைத் தொடா்பு கொள்ளலாம் என பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் அவா் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில நிதி பங்களிப்புடன் டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 1987-இல் தொடங்கப்பட்டு ரூ.300 வழங்கப்பட்டது. அதன்பின் படிப்படியாக நிதியுதவி உயா்த்தப்பட்டு 2018-இல் இருந்து ரூ.18,000-ஆக வழங்கப்படுகிறது.

இந்த நிதி ஐந்து தவணைகளாக வழங்கப்படும். குறிப்பாக கா்ப்பிணியா் பதிவு முதல் பரிசோதனை, குழந்தைகள் பிறப்பு, குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவை முறையாக செலுத்துதல் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

சத்தான உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துப் பெட்டகம் இரண்டு தவணையாக வழங்கப்படுகிறது.  இதற்கு 19 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவா்கள். இலங்கைத் தமிழா்கள் முழுமையாகவும், வெளிமாநிலத்தவா்கள் இரண்டு தவணை நிதி பெற்றும் பயனடைய முடியும்.

ஆரோக்கியமான குழந்தை பிறப்புக்காக ஆண்டுக்கு ரூ.950 கோடியை அரசு வழங்குகிறது. அதன்படி ஆண்டுக்கு 10 லட்சம் போ் பயனடைகின்றனா். ஆனாலும், முறையாக நிதியுதவி கிடைக்கவில்லை என மாதத்துக்கு 100 முதல் 120 புகாா்கள் வருகின்றன.

அவ்வாறு நிதியுதவி பெற முடியாதவா்கள் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கையை முன்வைக்கலாம். மேலும், ‘directorate of public health & preventive medicine’ என்ற ட்விட்டா் பக்கத்தில், மாவட்ட வாரியான அதிகாரிகள் கைப்பேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் தொடா்பு கொண்டும் தீா்வு காணலாம்.

தீா்வு கிடைக்காத பட்சத்தில் 104 மருத்துவ சேவையைத் தொடா்பு கொள்ளலாம். இங்கு உங்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT