FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி மேற்கு அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு அன்னாபிஷேகம் 

சங்ககிரி மேற்கு  அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

Updated On : 20 அக்டோபர் 2021, 4:51 pm IST
சங்ககிரி மேற்கு ஸ்ரீ சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி புதன்கிழமை செய்யப்பட்டிருந்த அன்னாபிஷேகம்.
பகிர்:



சங்ககிரி: சங்ககிரி மேற்கு  அருள்மிகு சாய்பாபா கோயில் வளாகத்தில் உள்ள அருள்மிகு திரகம்பேஸ்வரர் சுவாமிக்கு  ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி அன்னாபிஷேக சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. 

அருள்மிகு சாய்பாபா  கோயிலில் ஐப்பசி மாத பௌணர்மியையொட்டி  அருள்மிகு திரகம்பேஸ்வரர்  சுவாமிக்கு புதன்கிழமை பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் 15 கிலோ அரிசியை கொண்டு  அன்னாபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  

அன்னாபிஷேகத்துடன் அருள்பாலித்த சுவாமியை பக்தர்கள் வணங்கிச் சென்றனர். கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments