தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுதமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும் இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் தகவலில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அக்டோபர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது.
அதாவது, தமிழகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிகக் கனமழை பெய்யும் என்றும், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அக்டோபர் 26 ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இன்றும் நாளையும் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை பெய்திருக்கும் மழை அளவு