தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

DIN

ஸ்ரீபெரும்புதூர்: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் குறித்து  செம்பரம்பாக்கம் ஏரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதன்கிழமை  பார்வையிட்டு  ஆய்வு நடத்தினார்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செம்பரம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கள் குறித்தும், ஏரியின் நீர் இருப்பு மற்றும் உறுதி தன்மை குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  புதன்கிழமை செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். முதலில் ஏரியின் ஐந்து கண் மதகை பார்வையிட்டு ஆய்வு நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்பு ஐந்து கண் மற்றும் 19 கண் மதகுகளில் அமைக்கப்பட்டுள்ள அடைப்பான்களை சீரமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இதையடுத்து ஏரிகரையின் மீது வைக்கப்பட்டிருந்த ஏரியின் கால்வாய்கள் தூர்வாரப்பட்ட வரைபடங்கள், ஏரிக்கு நீர் ஆதாரம் எம்த அம்த பகுதிகளில் இருந்து வருகிறது என்பன குறித்த வரைபடங்களை பார்வையிட்டார்.

முன்னதாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு குடிநீர்  வழங்கப்பட்டு வரும் நசரத்பேட்டையில் உள்ள 530 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு  நிலையத்தையும்  முதல்வர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்ட பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்தை அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மில்லியன் கனஅடி, நீர் மட்ட அயரம் 24 அடி.  தற்போது ஏரியில் 2789 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 148 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்ட உயரம் 2.74 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT