தமிழ்நாடு

‘அரசு ஊழியர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்’: சிஐடியூ

DIN

திருப்பூர்: தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம், ஆவின் உள்ளிட்ட அரசுதுறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சிஐயூடி மாநிலக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற சிஐடியூ தொழிற்சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான அ.செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்க நிறுவனங்கள் மறுத்து வருகிறது.இதில் அரசு தலையிட வேண்டும். உள்ளாட்சி துறையில் பணியாற்றும் உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு குறந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.676 வழங்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.391 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, ஏற்கெனவே அறிவித்தபடி உள்ளாட்சி தொழிலாளர்களுக்கு ரூ.676 குறைந்தபட்ச ஊதியமாக வழங்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆட்சியில் இருந்த அதிமுக அரசானது கரோனா நிதியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்களுக்கு வழங்கிவந்த 20 சதவீத போனஸை 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

ஆகவே, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு இதனை சரிசெய்து அரசு ஊழியர்களுக்கு பழையபடி 20 சதவீத போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாக வழங்க வேண்டும். திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வரும் பெண்களுக்கு வாரவிடுமுறையை கட்டயமாக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை விசாரிக்க விசாக கமிட்டி அமைக்க வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். அதுவரையில் மதுவினால் வரும் வரும் வருமானத்தில் 5 சதவீதத்தை விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மதுப்பழக்கத்தில் இருந்து தொழிலாளர்களை விடுவிக்கத் தேவையான மருத்துவ உதவிகளுக்காக செலவு செய்ய வேண்டும் என்றார்.”

இந்த சந்திப்பின்போது, சிஐடியூ மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT