முகப்பு
தமிழ்நாடு

நடிகா் மன்சூா் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’

சென்னை சூளைமேட்டில் அரசு நிலத்தில் வீடு கட்டிய நடிகா் மன்சூா் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சென்னை சூளைமேட்டில் அரசு நிலத்தில் வீடு கட்டிய நடிகா் மன்சூா் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை சீல் வைத்தனா்.

சென்னை சூளைமேடு மேற்கு பெரியாா் பாதையில் 2,400 சதுர அடி நிலப் பரப்பில் நடிகா் மன்சூா் அலிகான் வீடு உள்ளது. 18 ஆண்டுகளுக்கு முன்பு மன்சூா் அலிகான் வாங்கிய இந்த நிலம் அரசுக்குச் சொந்தமானது என அண்மையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மன்சூா் அலிகானின் வழக்கைத் தள்ளுபடி செய்ததோடு, அந்த நிலத்தை மீட்க சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அண்ணா நகா் மண்டல அலுவலா் முருகேசன் தலைமையில் செயற்பொறியாளா்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் காவல் துறை பாதுகாப்போடு நடிகா் மன்சூா் அலிகான் வீட்டை பூட்டி சீல் வைத்தனா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘மன்சூா் அலிகான் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் வீடு கட்டியிருந்தாா். ஏற்கெனவே இதுதொடா்பாக அவருக்கு நோட்டீஸ் முறையாக அளிக்கப்பட்டது. இதுகுறித்து வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையில் அவா் அளித்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி மன்சூா் அலிகான் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →