சென்னை: வரும் நவம்பர் மாதம் முதல், இளநிலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகளுக்கான அனைத்துப் பருவத் தேர்வுகளும் நேரடியாகவே நடத்தப்படும், ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ். கௌரி கூறுகையில், நவம்பர் மாதம் முதல், அனைத்து மாணவ, மாணவியர்களும் பருவத் தேர்வுகளை நேரில் வந்து வகுப்பறைகளில்தான் எழுதுவார்கள்.
இதையும் படிக்கலாமே.. இந்த ராசிக்காரருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்: இந்த வாரப் பலன்கள்
சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்புப் பெற்ற அனைத்துக் கல்லூரிகளும், மாணவ, மாணவிகளுக்கு கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நேரடியாக தேர்வுகளை நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.