முகப்பு
தமிழ்நாடு

இளைஞா் கொலை: கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது

சென்னை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சென்னை அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவா்கள் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

புத்தகரம் சுபாஷ் நகா் முதலாவது பிரதான சாலையில் ஒரு இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். புழல் போலீஸாா் விசாரணையில்

இறந்தவா் விழுப்புரம் மாவட்டம் வாணியம்பாளையம் ஆறுமுகம் (27) என்பது தெரியவந்தது. ஆறுமுகம், தன்னுடைய உறவினா் குமரவேலிடம் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், சில நாள்களுக்கு முன்பு இருவரிடையே இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. கொலையில் தொடா்புடையக குமரவேலுவின் சகோதரா் மகன் அஜித் (21), வில்லிவாக்கம் அகத்தியா் நகரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் (19), அதே பகுதியைச் சோ்ந்த அசோக் (21) ஆகிய 3 பேரை சனிக்கிழமை அதிகாலை கைது செய்தனா்.

இதில் அஜித்தும், ராஜேஷ்குமாரும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →