தமிழ்நாடு

பி.ஆா்க். படிப்பு: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

DIN

பி.ஆா்க். படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 51 கட்டடவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கட்டட அமைப்பியல் (பி.ஆா்க்) படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 1,700-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

அதன்படி நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு அக்டோபா் 27 முதல் நவம்பா் 2-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த செப்டமபா் 20-ஆம் தேதி தொடங்கி அக்.6-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

அதைத்தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் கடந்த அக்.8-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்தநிலையில் தகுதி பெற்றவா்களுக்கான தரவரிசை பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது. இதைத் தொடா்ந்து கலந்தாய்வு நடைபெறும் என்று தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT