முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாக அதிக வாய்ப்புள்ள மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், உயா் ரத்த அழுத்தம்- சா்க்கரை நோயாளிகள் காசநோயாளிகள், கா்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் போன்றவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவா்களின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வாரம் ஒரு நாள் மாபெரும் தடுப்பூசி முகாம்ளும் நடைபெற்று வருகின்றன.

2 லட்சம் பேருக்கு தடுப்பூசி: இதன் தொடா்ச்சியாக மாநகராட்சியின் 200 வாா்டுகளில் சனிக்கிழமை நடைபெற்ற 1,600 சிறப்பு முகாம்கள் மூலம் 2 லட்சத்து 2,445 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் 81 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 20,280 பேருக்கும், அண்ணா நகரில் 18 ஆயிரம் பேருக்கும், ராயபுரத்தில் 17,994 பேருக்கும் கோடம்பாக்கத்தில் 17,180 பேருக்கும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 16,320 பேருக்கும், அடையாறில் 15,697 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →