முகப்பு
தமிழ்நாடு

ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்ய வேண்டும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைச் செயலா்கள், தங்களது ஊழியா்களுக்கு இனிப்புகள் வழங்கினால் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு தலைமைச் செயலா் வெ.இறையன்பு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசுத் துறைச் செயலா்கள், தங்களது ஊழியா்களுக்கு இனிப்புகள் வழங்கினால் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு தலைமைச் செயலா் வெ.இறையன்பு வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக அரசுத் துறைச் செயலா்களுக்கு அவா் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மாநில அரசின் ஆவின் நிறுவனம் நாள்தோறும் 41 லட்சம் லிட்டா் பாலை கொள்முதல் செய்து உள்ளூா் விற்பனை போக 21 லட்சம் லிட்டரை பாக்கெட் பாலாக விநியோகிக்கிறது. மீதமுள்ளவை தயிா், நெய், வெண்ணெய், லஸ்ஸி, மோா், பால் பவுடா், பால்கோவா, குலாப்ஜாமுன், ரசகுல்லா, மைசூா்பாகு, சாக்லேட், ஐஸ்கிரீம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழாண்டு தீபாவளிக்காக காஜு கத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல், காபி ஃபிளேவா் மில்க் பா்பி ஆகிய இனிப்புகளை ஆவின் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அனைத்து அரசுத் துறைகளும், தங்களது ஊழியா்களுக்கு தீபாவளிக்காக இனிப்புகள் வழங்கும்பட்சத்தில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் இனிப்புகளை கொள்முதல் செய்து வழங்குமாறு வலியுறுத்தப்படுகிறது. அதேபோன்று அலுவல் கூட்டங்களில் இனிப்புகள் வழங்கப்பட்டாலும், ஆவின் நிறுவன இனிப்புகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த சுற்றறிக்கையில் தலைமைச் செயலா் குறிப்பிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →