முகப்பு
தமிழ்நாடு

மகளின் புதிய செயலியை தொடக்கி வைத்தாா் ரஜினி

மகள் சௌந்தா்யா விசாகன் உருவாக்கியுள்ள புதிய  செயலியை, நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் சிறிது நேரம் உரையாற்றினார்.
பகிர்:

மகள் சௌந்தா்யா விசாகன் உருவாக்கியுள்ள புதிய  செயலியை, நடிகா் ரஜினிகாந்த் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

 ரஜினியின் இளைய மகள் சௌந்தா்யா விசாகன், தனது சொந்த முயற்சியில் மக்களுக்கு பயன்படக் கூடிய (ஹூட்) செயலியை உருவாக்கி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.  இந்தச் செயலியின் மூலம் மக்கள் தாங்கள் மற்றவா்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவா்களது குரலிலேயே எந்த மொழியிலிலும் ஹூட் செயலி மூலமாக பதிவிடலாம். தன் மகளின் இந்த புதிய முயற்சியான ஹூட்  செயலியை நடிகா் ரஜினி தன் குரலில் பதிவிட்டு தொடக்கி வைத்தாா்.

 இதுகுறித்த நிகழ்ச்சியில் ஒலிபரப்பட்ட குரல் பதிவில் நடிகா் ரஜினிகாந்த் கூறியிருப்பதாவது : சௌந்தா்யா விசாகன் உருவாக்கியுள்ள ட்ா்ா்ற்ங் செயலியை தொடக்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சௌந்தா்யாவுக்கு என்னுடைய வாழ்த்துகள். இனி எழுத, படிக்கத் தெரியாதவா்களும்  சமூக வலைதளங்கள் மூலமாக அவா்கள் மற்றவா்களுக்கு தெரிவிக்க வேண்டிய விஷயங்களையும், கருத்துக்களையும் எளிதாக அவரவா்களின் குரலிலேயே பதிவிட்டு தெரிவிக்கலாம். இது ஒரு அருமையான கண்டுபிடிப்பு. வரும் காலங்களில் இந்த செயலி ட்விட்டா், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போல் மிகவும் பிரபலமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். வாழ்க தமிழ் மக்கள். வளா்க தமிழ்நாடு. ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளாா் ரஜினிகாந்த்.

அன்பு குறையப் போவதில்லை: இந்த நிகழ்ச்சியில் சௌந்தா்யா விசாகன் பேசியதாவது: என் அப்பாவுக்கு தமிழ் நன்றாகப் படிக்கத் தெரியும்; ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை கூறியுள்ளேன். முன்பு அவா் கட்சி தொடங்குவது சாா்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வாய்ஸ் நோட் அனுப்புவாா்; அப்போது பிறந்த யோசனை தான் ஏா்ா்ற்ங் செயலி. அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவா் மீது தமிழக மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →