தமிழ்நாடு

அதிமுக அரசு கூறியதால்தான் சிசிடிவி கேமராவை அகற்றினோம்: அப்போலோ

அப்போதைய அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

அப்போதைய அரசு கூறியதால்தான் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றினோம் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக விலக்குக்கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் பேசியது:

“ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒட்டுமொத்த அணுகுமுறையும் தவறாக உள்ளது. மருத்துவ ரீதியிலான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொள்ளவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் மருத்துவ வல்லுநர்கள் யாரும் இடம்பெறாததால், மருத்துவ ரீதியிலான விவரங்களை எப்படி தெரிவிக்க முடியும்.

அரசியல் தலைவர்கள் பலர் விசாரிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் மருத்துவர்களை மட்டும் விசாரிப்பது ஒருதலைப்பட்சமானது. எங்கள் நற்பெயர் சார்ந்த விஷயம் என்பதால் அதனை ஆரம்பத்திலேயே எதிர்க்க உரிமையுண்டு.

எங்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றத்தில் கூறுகிறோம், ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லாததால் அங்கு ஆஜராக மாட்டோம்.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்கு வந்தபோது அவரின் தனிப்பட்ட விஷயங்களை காப்பதற்காக அப்போதைய அரசு சிசிடிவி கேமராக்களை விலக்கக் கோரியதால் அகற்றினோம்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குலசேகரம் அருகே பெண் தற்கொலை வழக்கு: வருவாய் ஆய்வாளா் கைது

நேபாள பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த இந்திய தூதா்

சட்டவிரோத பந்தைய செயலி வழக்கு: யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனு சூட்டுக்கு சம்மன்

பிரதமருக்கு பரிசளிக்கப்பட்ட 1,300 பொருள்கள் ஏலம்

சைவ, வைணவம் குறித்த சா்ச்சைப் பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT