கோப்புப்படம் 
தமிழ்நாடு

தீபாவளியன்று இறைச்சிக் கடைகளுக்கு அனுமதி: தமிழக அரசு

தீபாவளியன்று ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

DIN


தீபாவளியன்று ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் இறைச்சிக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

"இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்."

முன்னதாக, தீபாவளியன்று இறைச்சிக் கடைகள் இயங்க சென்னை மாநகராட்சி தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

பி.எட். ,எம்.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மிகக்குறைந்த வயதில் எம்மி விருதை வென்ற அடோலசென்ஸ் நடிகர்!

விஜய்யை எம்ஜிஆருடன் ஒப்பிட வேண்டாம்: சி. விஜயபாஸ்கர்

SCROLL FOR NEXT