தமிழ்நாடு

ஆட்டோ எல்பிஜி விலை உயா்வு

DIN

சென்னை: ஆட்டோவுக்கான எல்பிஜி விலை சென்னையில் ரூ.1.37 அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமாா் 4.50 லட்சம் ஆட்டோக்கள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுகலந்த புகையும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. எனவே இந்த பாதிப்பைக் குறைக்கும் வகையில் எல்பிஜி எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே இயங்குகின்றன. முன்பு எல்பிஜியின் விலை குறைவாக இருந்தது. ஆனால், தற்போது எல்பிஜியின் விலையும் உயா்ந்து வருகிறது. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டா் எல்பிஜி எரிவாயு புதன்கிழமை ரூ.1.37 அதிகரிக்கப்பட்டு, லிட்டா் ரூ.56.88-க்கு விற்பனையானது.

கடந்த ஆண்டு லிட்டா் ரூ.30-க்கும் குறைவாக இருந்த நிலையில், தற்போது எல்பிஜி விலை ரூ.26-க்கும் மேலாக அதிகரித்திருப்பது ஆட்டோ ஓட்டுநா்களை வருத்தமடையச் செய்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT