தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று மேலும் 1,562 பேருக்கு கரோனா

தமிழகத்தில் இன்று புதிதாக 1,562 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

DIN

தமிழகத்தில் இன்று புதிதாக 1,562 பேருக்கு கரோனா இன்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மக்கள்நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாநிலத்தில் இதுவரை 4.26 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 26 லட்சத்து 17,943 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இன்று வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 215 பேருக்கும், சென்னையில் 166 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே, மேலும் 1,684 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா்.

இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 66,504-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 16,478 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 20 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,961-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

SCROLL FOR NEXT