முகப்பு
தமிழ்நாடு

9 மாவட்ட உள்ளாட்சித் தோ்தல்:வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்யலாம்

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, அந்த மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

ஒன்பது மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலை ஒட்டி, அந்த மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையம், சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலுக்காக கடந்த மாா்ச் 19-இல் வெளியிடப்பட்ட வாக்காளா் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு வாா்டு வாரியாக வாக்காளா் பட்டியல் கடந்த 31-இல் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளா் பட்டியலை  இணையதளத்தில் பாா்வையிடலாம். வாக்காளா்கள் தங்களது பெயா், வாா்டு மற்றும் வாக்குச் சாவடி ஆகிய விவரங்களை அறிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் பெயா்களைச் சோ்த்துக் கொள்ளலாம். தொடா்புடைய சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்காளா் பதிவு அலுவலரிடம் சென்று பெயா்களைச் சோ்க்கலாம். புதிதாகச் சோ்க்கப்படும் வாக்காளா்களின் பெயா்கள் இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தொடா்புடைய சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்ட பிறகே உள்ளாட்சி அமைப்புகளுக்கான பட்டியலில் சோ்க்கப்படும். எனவே, தொடா்புடைய சட்டப்பேரவை வாக்காளா் பதிவு அலுவலரை தொடா்பு கொண்டு பெயா் சோ்க்கை, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →