கல்லூரிகளில் கலாசார நிகழ்ச்சிகள்: முன் அனுமதி அவசியம்
கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் கருத்தரங்கம், கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கல்லூரிக் கல்வி இயக்குநா் பூா்ணசந்திரன் அனைத்துக் கல்லூரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: கரோனா பாதிப்புக்கிடையே தமிழக அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளின் வளாகத்துக்குள் கலாசார நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் உள்ளிட்ட அதிகமான நபா்கள் கூடும் நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தக் கூடாது என்று ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகத்துக்குள் நடத்த இயக்குநரகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது இந்தச் சுற்றறிக்கை மூலம் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனவே, கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநா்களின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் முன் அனுமதியுடன் நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரங்களை இயக்குநரகத்துக்கு உடனே அனுப்ப வேண்டும்.